உமக்கான வேலைகளை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். எனக்கான வேலைகளை
நான் பார்த்துக்கொள்வேன். நமக்கான வேலையை யார்பார்ப்பது?
விவசாயம் கண்டுபிடித்தாயிற்று, அதன் விளைச்சளை பகிர்ந்து கொள்ள
வியாபாரம் ஆயிற்று. சமூகமாக வாழத் துவங்கியாயிற்று. இந்த அமைப்பையெல்லாம் இயற்கை
மற்றும் செயற்கைக் காரணிகளிடமிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? யார்
பாதுகாப்பது?
என்றெல்லாம் யோசிக்கத்துவங்கிய மனிதன்தான் அரசாங்கம் என்பதைக்
கண்டறிந்தான். அதன் நெறிமுறைகளை வகுத்தான். அதன் நிர்வாகத்தைச் சரிவரச்செய்யும்
மனிதனை அரசனென்றும், கோ என்றும், இறை என்றும் தொழுதான்.
இப்படி முறையான அரசாங்க அமைப்பை ஏற்படுத்திய முந்திய சமுதாயம்
சுமேரியர்களின் சமுதாயம் ஆகும். சற்றேரக்குறைய மாயன்களுக்கு நிகரான காலத்தில் வாழ்ந்தவர்கள்
தான் சுமேரியர்கள். இன்றைய ஈராக் இருக்கும் பகுதிதான் பண்டைய “சுமேரியா“.
“சுமேரியா“ என்று நானாகத்தான் குறிப்பிடுகிறேன். உண்மையில் அந்தப்
பகுதியின் பெயர் “மொசபடோமியா“. உலகின் மிகப்பழுத்த ஆற்றங்கரை நாகரீக பிரதேசங்களில்
மொசபடோமியாவும் ஒன்று. இயேசுகிருஸ்துவிற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பே பண்பட்ட
சமூகமாக வாழ்ந்து தங்கள் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர் மொசபடோமியர்கள்.
இங்கு வாழ்ந்த சுமேரியர்கள் மொசபடோமியர்கள் என்றும்
அழைக்கப்பட்டனர். மொசபடோமியர்களுக்கு சுமேரியர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்று
ஆராய்ச்சி செய்தோமானால்.. அது நம் தமிழர்கள் என்ற பெயர் நமக்கு வந்ததைப் போன்றதே. ஆம்,
அன்றைய ”யுப்ரட்டீஸ்“ “டைகரீஸ்“ என்ற இரு நதிகளுக்கு இடைய இருந்த புமி
மொசப்படோமியா. இங்கு வாழ்ந்த மோசபடோமியர்கள் பேசிய மொழி சுமேரியம் என்பது.
அதனால்தான் சுமேரியம் பேசியவர்கள் சுமேரியர்கள்.
இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஏழாயிரம் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்து, இன்று வழக்கொழிந்து போன ஒரு நாகரீகத்தை, அவர்கள் விட்டுப்போன
நிரந்தமான கல்கட்டிடங்கள், பயன்படுத்திய உபகரணங்களின் எச்சங்களில் இருந்து அறிந்து
கொள்ளலாம். அது சரி. அவர்கள் இன்ன மொழிதான் பேசினார்கள் என எப்படி சொல்லமுடியும்
என சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம்.
இதை வரலாற்று அறிஞர்கள் எப்படிக்கணிக்கிறார்கள் என்றால், ஒரு
நாகரீகத்தினைத் தொடர்ந்தோ, அதற்கு மாற்றாகவோ வேறெரு நாகரீகம் உருவாகும். இப்புதிய
நாகரீகத்தின் குறிப்புகளில் இருந்தும் ஆரம்ப நாரீகத்தின் சாரம்சங்களை அறிந்து
கொள்ளலாம். இவ்வாறுதான், “அக்தாத்“ எனப்படும் ஒரு சமூகத்தின் குறிப்புகளின்
அடிப்படையில் மொசபடோமியர்கள், சுமேரியர்கள் என்று அடையாளம் காணப்படுகின்றனர்.
அக்தாத் மொழியில் ”சுமேரியர்கள்“ என்றால் “கருந்தலை மனிதர்கள்“ என்று பொருளாம்.
இந்த சுமேரியர்கள் பேசிய மொழி ”சுமேரியம்”. சுமேரியம் என்ற சொல்லே அக்தாத்
இனத்தினர் குறிப்பிடுகிறார்கள். எனவே, சுமேரியம் பேசியவர்கள் சுமேரியர்கள் என
கீழிந்து மேலாகக் கொள்ளப்படுகிறது.
இந்த சுமேரியர்கள், வழக்கமான மற்ற நாகரீகத்தைப்போல், கட்டிங்கள்
கட்டினார்கள், கணக்கில், வாணியலில் வல்லுனர்களாக இருந்தார்கள் என்பதையும் தாண்டி
சுமேரியர்களுக்கே உரித்தான தனிச்சிறப்பு என்பது, அவர்கள் முதன்முதலில்
முறைப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பைக்கொண்டிருந்தனர். இரண்டாவது அவர்கள்தான் “சக்கரத்தின்“
பயன்பாட்டைக் கண்டறிந்த முன்னோடியினர். இந்த இரண்டிற்கும் மேலாக இருக்கும்
தனிச்சிறப்பு வாய்ந்த மூன்றாவது சிறப்பம்சம், அவர்கள் ஆகச்சிறந்த நீர்மேலாண்மையை
மேற்கொண்டிருந்தனர்.
மொசபடோமிய பகுதி இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியானாலும்,
இந்தப்பகுதியில் மழைப்பொழிவு மிகவும் குறைவு. ஆண்டிடொன்றிற்கு 13 செ.மி.யையும்
விடக்குறைவு. இதனால், ஆண்டு முழுவதுமான விவசாய தேவைக்கு பல்வேறு ஏரிகள்,
கண்மாய்கள், குளங்கள் வெட்டி அதனை முறையாகப்பயன்படுத்திவந்தனர். இந்த பொதுநீர்
மேலாண்மையை சுமேரிய அரசு செவ்வனே செய்து வந்தது. கவனிக்கவும், “சுமேரிய அரசு“
நீர்மேலாண்மையை செவ்வனே செய்து வந்தது.
இவ்வாறெல்லாம் திட்டமிட்ட வாழ்க்கை வாழ்ந்த, வேளாண் வளமை மிகுந்த
சுமேரியர்கள் கணக்கிலும் புலிகள் தான் எனச் சொல்லவும் வேண்டுமா?
No comments:
Post a Comment